டி20
டி20

சைகை மொழியில் டி20 வர்ணனை: டிஸ்னி ஸ்டார் அறிவிப்பு!

டி20 கிரிக்கெட் போட்டிகள்: சைகை மொழி வர்ணனையுடன் ஒளிபரப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜுன் 1-ம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை விளையாட்டு போட்டிகளின் நேரலையில் சைகை மொழி மற்றும் ஆடியோ விளக்கங்கள் உடன் நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.

காது கேளாதோர் கிரிக்கெட்டை காண வசதியாக சமிக்ஞை மூலமும் பார்வைத்திறன் குறைவு உள்ளவர்களுக்கு ஆடியோ விளக்கங்களும் நேரலையில் கொடுக்கப்படுவது இதுவே முதல்முறை என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது.

சைகை முறையில் தரப்படும் நேரலையில் ஒவ்வொரு பந்துக்குமான நிலவரம் அளிக்கப்படும். ஆடியோ விளக்க நேரலை என்பது வாய்ஸ்-ஓவர் தொழில்நுட்பம் மற்றும் படங்கள், உரைகள் ஆகியவற்றின் வழியாக விளக்கங்கள் உருவாக்கப்படுவது.

லட்சக்கணக்கான மாற்று திறனாளி விளையாட்டு ஆர்வலர்கள் இதனால் பயனடைவார்கள் என இளைஞர் நல மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com