டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டரைவிட சுழல்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மீது நம்பிக்கையுள்ளதாக கூறியுள்ளார்.
வனிந்து ஹசரங்கா
வனிந்து ஹசரங்கா படம்: இலங்கை கிரிக்கெட் / எக்ஸ்
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணிகளை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் அறிவித்தன.

சமீபத்தில் டி20 உலகக் கோப்பைக்கான வனிந்து ஹசரங்கா தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்தியாவைப் போன்றே 3 சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி விவரம்

வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணைக் கேப்டன்), குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்கிரம, ஏஞ்சலோ மேத்யூஸ், தாசுன் ஷானகா, தனஞ்ஜெயா டி சில்வா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா மற்றும் தில்ஷன் மதுஷங்கா.

ரிசர்வ் வீரர்கள்

அசிதா ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பனுகா ராஜபக்‌ஷா மற்றும் ஜனித் லியாநாகே

வனிந்து ஹசரங்கா
புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

இலங்கை அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவர் உபுல் தராங்கா பேசியதாவது:

டெத் ஓவரில் பந்து வீச மதீஷா பதிரானா, நுவான் துஷாரா இருக்கிறார்கள். ஆனால், பவர்பிளேவில் விக்கெட்டுகள் எடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் மதுஷனகா இருக்கிறார்; அசிதா ஃபெர்னாண்டோ ரிசர்விலும் இருக்கிறார்.

சில நேரங்களில் மூன்று சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டியிருக்கும். அதனால்தான் துனித் வெல்லாலகேவை சேர்த்துள்ளோம். அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரைவிட சுழல்பந்து ஆல்ரவுண்டர் மீது நம்பிக்கையுள்ளது. தனஞ்செயாவுக்குப் பிறகு வெல்லாலகே பந்துவீச்சின் மீது மதிப்பு வைத்துள்ளோம். பேட்டிங்கில் அதிரடியாக ஆடவும் அவர் உதவுவார்.

வனிந்து ஹசரங்கா
12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

அமெரிக்கா, மே.இ.தீவுகளில் ஆடுகளங்கள் மெதுவாகவே இருக்கும். அதனால் 3 சுழல்பந்துவீச்சாளர்கள் உதவுவார்கள். அமெரிக்காவில் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். ஆஸி.-இல் இருந்து பிட்ச்களை எடுத்து வந்தாலும் அவை பெரும்பாலும் மெதுவாகவும் சமமற்றதாவும் இருக்கும். அதனால் இதைக் கணிப்பது கடினமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com