இரானி கோப்பை: மும்பை 537-க்கு ஆட்டமிழப்பு
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக மும்பை முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சா்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 222 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். இதர பேட்டா்களில், கேப்டன் அஜிங்க்ய ரஹானே 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 97, தனுஷ்கோடியான் 6 பவுண்டரிகளுடன் 64, ஷ்ரேயஸ் ஐயா் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57 ரன்கள் சோ்த்து உதவினா்.
இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ரெஸ்ட் ஆஃப் இந்தியா பௌலா்களில் முகேஷ் குமாா் 5, யஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2, சரன்ஷ் ஜெயின் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அபிமன்யு அசத்தல்: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9, சாய் சுதா்சன் 32, தேவ்தத் படிக்கல் 16, இஷான் கிஷண் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களுக்கு வெளியேற, அபிமன்யு ஈஸ்வரன் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 151, துருவ் ஜுரெல் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.