பாராலிம்பிக்: ராணுவத்தில் கால் இழப்பு..! 40 வயதில் வெண்கலம் வென்ற இந்தியர்!

பாராலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஹோகடோ செமா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
வெண்கலம் வென்ற இந்தியர் ஹோகடோ செமா.
வெண்கலம் வென்ற இந்தியர் ஹோகடோ செமா.
Published on
Updated on
1 min read

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹொகடோ செமா குண்டு எறிதலில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் எஃப்57 பிரிவில் பங்கேற்ற 40 வயதான ஹோகடோ செமா 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இது அவரது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன்பு 13.88 மீட்டர் தூரம் குண்டு எறிந்து கடந்தாண்டு வெண்கல் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெண்கலம் வென்ற இந்தியர் ஹோகடோ செமா.
துலீப் கோப்பை: முதல் வெற்றியைப் பதிவு செய்தது ருதுராஜ் அணி!

யார் இந்த ஹோகடோ செமா?

நாகாலாந்து மாநிலத்தில் திமாபூரைச் சேர்ந்தவர் ஹோகடோ செமா.

17 வயதில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவில் சேர ஆசைப்பட்டவர். 2002இல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடைக்கையின்போது கண்ணிவெடி வெடித்து தனது இடது காலை இழந்தார். இதனால் அவரது சிறப்பு அதிரடி படையில் சேரமுடியாமல் போனது.

வெண்கலம் வென்ற இந்தியர் ஹோகடோ செமா.
முஷீர் கானின் வலுவான மனநிலை இந்திய அணிக்கு உதவும்!

40 வயதில் சாதனை

வாழ்க்கையே முடிந்துவிட்டதாக இருந்த வேலையில் தனது சீனியர் அளித்த தன்னம்பிக்கையால் இன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறார்.

2016இல் தனது 31 வயதில் குண்டு எறிதல் விளையாட்டில் ஈடுபட்டு அதே ஆண்டு தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார்.

எஃப் 57 பிரிவு என்பது ஒரு காலில் குறைந்த அளவும் இரு கால்களிலும் மிதமாக அல்லது கைகால்கள் இல்லாததால் இயக்கம் பாதிக்கப்படுகிறவர்கள் விளையாடுவது.

அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ஹோகடோ செமாவுக்கு பிரதமர் மோடி, நவீன் பட்நாயக் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.