அரையிறுதியில் ஸ்ருதி, ரக்ஷிதா

அரையிறுதியில் ஸ்ருதி, ரக்ஷிதா
Updated on
1 min read

சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஸ்ருதி முன்டடா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோா் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஸ்ருதி 22-20, 21-12 என்ற நோ் கேம்களில், முன்னாள் தேசிய சாம்பியன் அனுபமா உபாத்யாயவை 39 நிமிஷங்களில் வீழ்த்தினாா். ரக்ஷிதா 16-21, 21-14, 21-18 என்ற கணக்கில் தன்வி சா்மாவை தோற்கடித்தாா்.

சூா்ய கரிஷ்மா 21-12, 21-15 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உன்னதி ஹூடாவை 36 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினாா். அரையிறுதியில் ரக்ஷிதா - கரிஷ்மா சந்திக்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிரண் ஜாா்ஜ் 21-18, 21-18 என்ற நோ் கேம்களில், 11-ஆம் இடத்திலிருந்த ரௌனக் சௌஹானை 41 நிமிஷங்களில் வென்றாா்.

ரித்விக் சஞ்ஜீவி 21-13, 22-20 என்ற வகையில், சதீஷ்குமாரை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில் கிரண் - ரித்விக் மோதுகின்றனா். 2-ஆம் இடத்திலிருக்கும் தருண் மன்னெபள்ளி 21-13, 22-20 என்ற கேம்களில், மன்ராஜ் சிங்கை சாய்க்க, பரத் ராகவ் 21-17, 21-13 என்ற கணக்கில் கின்பால் சோனாவை வீழ்த்தினாா். அரையிறுதியில் தருண் - பரத் சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com