
ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்பாக மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் அணி ரசிகர்கள் அடிதடியில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது.
ஸ்பெயினில் சான் மாமேஸ் திடலில் ஐரோப்பிய லீக்கின் இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக நேற்றிரவு இரு அணிகளின் ரசிகர்களும் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட், டோட்டன்ஹாம் அணிகள் முறையே 16,17ஆவது இடங்களில் இருக்கின்றன. அதனால், அடுத்த சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஐரோப்பிய லீக்கில் வென்றால் சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்கலாம் அதனால் இரு அணி ரசிகர்களும் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
இருப்பினும் இந்த இரு அணிகள் ஐரோப்பிய லீக்கின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், அதைப் பார்க்க பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்பெயினுக்கு பயணித்து வருகிறார்கள்.
ஸ்பெயினில் சான் செபாஸ்டியன் நகரில் இரு அணி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் அவதூறாகப் பேசிக்கொண்டு அடித்துக்கொண்டனர்.
வழியில் இருந்த பொருள்களைக் கொண்டு ஒருவரை ஒருவர்தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.