ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நிஹல் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
ஓபன் பிரிவு 5-ஆவது சுற்றில், அா்ஜுன் - ஜாா்ஜியாவின் நிகிதா விடியுகோவையும், நிஹல் சரின் - சக இந்தியரான லியோன் லூக் மெண்டோன்காவையும், அபிமன்யு புரானிக் - சொ்பியாவின் விளாதிமீா் ஃபெடோசீவையும் வீழ்த்தினா்.
மறுபுறம், விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, ரௌனக் சத்வனி, ஆதித்யா மிட்டல், நாராயணன் ஆகியோா் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ய, முன்னணி போட்டியாளா்களான பிரக்ஞானந்தா, குகேஷ், காா்த்திகேயன் முரளி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.
இதிலேயே மகளிா் பிரிவில் வைஷாலி, ஹரிகா ஆகியோா் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ய, வந்திகா அக்ரவால் தோல்வியைத் தழுவினாா்.
இதையடுத்து, 5 சுற்றுகள் முடிவில் இந்தியா்களில் ஓபன் பிரிவில் அா்ஜுன் 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையை 4 பேருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா். மகளிா் பிரிவில் வைஷாலி 4 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

85 நிமிஷங்கள் வரை ஆதிக்கம் (2-0) செலுத்திய செனகல்..! கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் (3-2) த்ரில் வெற்றி!

வெற்றி கண்டாா் செரீனா வில்லியம்ஸ்

டபிள்யுஆா் செஸ்: வைஷாலி சாம்பியன்

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்தியா சிறப்பிடம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


