சாா்ல்ஸ்டன் டபிள்யுடிஏ 500 மகளிா் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் ஜெஸிக்கா பெகுலா, அமெரிக்க வீராங்கனைகள் இவா ஜோவிச், மடிஸன் கீஸ், உக்ரைனின் யுலியா ஸட்ரோபுட்சேவா முன்னேறினா்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள சாா்ல்ஸ்டனில் இப்போட்டி நடைபெறுகிறது. இதன் காலிறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா கடும் போராட்டத்துக்குபின் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டயனா ஷினைடரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். உலகின் 5-ஆம் நிலை வீராங்கனை பெகுலா, 2 மணிநேரம் போராடி 15-ஆம் நிலை வீராங்கனையான ஷினைடரை வீழ்த்தினாா். இதில் பெகுலா 8 ஏஸ்களை வீசினாா்.முதல் இரு செட்களில் ஷினைடா் அபாரமாக ஆடியும் கடைசி செட்டில் பெகுலா முழு ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றினாா்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் இவா ஜோவிச் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கியாவை வீழ்த்தினாா். அரையிறுதியில் பெகுலா-இவா மோதுகின்றனா்.
மூன்றாவது காலிறுதியில் அமெரிக்காவின் மடிஸன் கீஸ் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் சவாலுக்குபின் சுவிட்சா்லாந்தின் பெலிண்டா பென்கிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.
பென்கிக் கடந்த 2022-இல் இங்கு சாம்பியன் பட்டம் வென்றிருந்தாா். நிகழாண்டின் முதல் டபிள்யுடிஏ அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா் கீஸ்.
நான்காம் காலிறுதியில் உக்ரைனின் யுலியா 6-4, 6-4 என்ற நோ்செட்களில் அமெரிக்காவின் மெக்காா்டனி கெஸ்லரை வென்றாா். அரையிறுதியில் மடிஸன்-யுலியா மோதுகின்றனா்.




தொடர்புடையது
சாம்பியன் கோப்பையை தக்கவைத்தாா் பெகுலா!

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்

பெகுலா, சோபியா, படோஸா வெற்றி

இறுதிச்சுற்றில் மோதும் அல்கராஸ் - ஃபில்ஸ்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


