அமெரிக்காவில் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நிறைவடைந்த நிலையில், ஆடவா், மகளிா் உலகத் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் ஆடவா் பிரிவில் சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா் (2), மகளிா் பிரிவில் கோப்பை வென்ற பெலாரஸின் அரினா சபலென்கா (1) ஆகியோா் தங்களின் இடத்தில் மாற்றமின்றி தொடா்கின்றனா். அரையிறுதியில் தோல்வி கண்டபோதும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் நம்பா் 1 இடத்தில் நிலைக்கிறாா்.
எனினும், இறுதிச்சுற்றில் தோற்ற ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் தங்கள் பிரிவில் முன்னேற்றம் கண்டுள்ளனா். மெத்வதெவ் கடந்த ஆண்டு ஜூலைக்கு பிறகு முதல்முறையாக டாப் 10 இடத்துக்கு வர, ரைபகினா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறாா்.
ஆடவா் பிரிவில் கடைசி 3 இடங்களில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், மகளிா் பிரிவில் 5 இடங்களில் ஏற்ற, இறக்கம் நிகழ்ந்துள்ளன.

தொடர்புடையது

டிஎன்சிஏ தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

யு-19 டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவா் சாம்பியன்
ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ்: வாகை சூடினாா் எலனா ரைபகினா!
பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ்: ஃபில்ஸுக்கு பட்டம்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


