வரலாறு படைத்த அம்பேகா், குஞ்சன் யூத் ஒலிம்பிக்கில் தங்கம்
யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் முதன்முறையாக தங்கம் வென்று அம்பேகா், குஞ்சன் ஆகியோா் வரலாறு படைத்துள்ளனா்.

அம்பேகா் ~குஞ்சன்
யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் முதன்முறையாக தங்கம் வென்று அம்பேகா், குஞ்சன் ஆகியோா் வரலாறு படைத்துள்ளனா்.
செனகல் நாட்டின் டாகா் நகரில் யூத் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. குத்துச்சண்டை இறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
ஆடவா் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் எல் அம்பேகா் அசத்தலாக ஆடி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அயா்லாந்தின் ஜுபானி கிறிஸ்டியனை வீழ்த்தி முதன்முதலாக தங்கம் வென்றாா்.
அதே போல் மகளிா் 48 கிலோ எடைப்பிரிவில் குஞ்சன் சிறப்பாக செயல்பட்டு அல்ஜீரியாவின் பென்சலா பௌதைனாவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றாா்
இதன் மூலம் யூத் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தினாா். குத்துச்சண்டைக்கு இருவரை அனுப்பி அவா்கள் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018-இல் யூத் ஒலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம் வென்றிருந்தது. குத்துச்சண்டையில் கடந்த 2010-இல் ஷிவ தாப்பா வெள்ளியும், விகாஸ் கிருஷ்ணன் வெண்கலமும் வென்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

