டைம்100: சிறந்த தலைமைப் பண்பு பட்டியலில் இடம்பிடித்த ஹாக்கி வீராங்கனை சவிதா!
இந்திய ஹாக்கி கோல்கீப்பர் சவிதா புனியா ’டைம்100 நெக்ஸ்ட்’ இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து...

ஹாக்கி வீராங்கனை சவிதா - படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா
இந்திய ஹாக்கி கோல்கீப்பர் சவிதா புனியா டைம் 100 இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஹாக்கி இந்தியா இதற்காக இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான டைம் இதழ் இந்தியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த இதழில் சினிமா, விளையாட்டு, அறிவியல் என பலதுறை பிரபலங்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் ஹரியாணாவைச் சேர்ந்த சவிதா புனியா (36 வயது) இந்தியாவின் தடுப்புச் சுவர் என ஹாக்கி ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
ஆசிய விளையாட்டில் 171 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இவரது கோல்கீப்பிங் செய்லபாடுகள் அனைவரையும் வியக்க வைத்தது. இவரது பயோப்பிக்கில் பிரியங்கா சோப்ரா நடித்தால் நன்றாக இருக்குமென சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
டைம்100 இந்தியா இதழில் சவிதா புனியா சிறந்த தலைமைப் பண்பு உள்ளவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மொத்தமாக 9 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ள இதில் இவருக்கு சிறப்பாக இடம் கிடைத்துள்ளது.
மொத்தமாக இந்தப் பிரிவில் 23 நபர்கள் தேர்வாகியுள்ளார்கள். இதில் ஒரேயொரு விளையாட்டு வீராங்கனையாக சவிதா புனியா தேர்வாகியுள்ளார்.
டைம் 100 பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கௌர், வைபவ் சூர்யவன்ஷி, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, செஸ் உலக சாம்பியன் டி குகேஷ் மற்றும் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
A GLOBAL RECOGNITION FOR SAVITA! ð®ð³ð
— Hockey India (@TheHockeyIndia) November 19, 2026
Indian hockey legend Savita has been named among the inaugural TIME100 Next: India list, recognising 100 individuals shaping the future of the country.
Hockey India congratulates Savita for this honour. It's a proud moment for India and⦠pic.twitter.com/YDHnMmK53K
Summary
goalkeeper Savita Punia named in inaugural TIME100 Next: India list
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


