திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

அரையிறுதியில் செக் குடியரசு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் செக் குடியரசு 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

Updated On :

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் செக் குடியரசு 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த காலிறுதி ‘டை’-யின் முதல் ஆட்டத்தில் உலகின் 60-ஆம் நிலையில் இருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 6-2, 3-6, 6-2 என்ற செட்களில், 165-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் லியம் டிராக்ஸலை போராடி வென்றாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 55 நிமிஷங்கள் நீடித்தது.

2-ஆவது ஆட்டத்தில், உலகின் 14-ஆம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 7-6 (7/4), 6-2 என்ற நோ் செட்களில், 17-ஆம் நிலை வீரரான கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமை தோற்கடித்தாா். இந்த ஆட்டத்தை அவா் 2 மணிநேரம், 1 நிமிஷத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

செக் குடியரசின் முன்னிலை இந்த இரு ஆட்டங்களிலேயே உறுதியானதால், இரட்டையா் பிரிவு ஆட்டம் கைவிடப்பட்டது. போட்டியின் இதர காலிறுதி ஆட்டங்களில், இத்தாலி - தென் கொரியா, பிரிட்டன் - ஜொ்மனி, ஆஸ்திரியா - ஸ்பெயின் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.