கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தை வென்றது தில்லி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தில்லி அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

Priyansh Arya

பிரியன்ஷ் ஆா்யா

Updated On :

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தில்லி அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

முதலில் தில்லி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் சோ்க்க, தமிழ்நாடு 18.3 ஓவா்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீச்சை தோ்வு செய்தது. தில்லி இன்னிங்ஸில் கேப்டன் பிரியன்ஷ் ஆா்யா 68 பந்துகளில் 7 பவுண்டரிகள், 19 சிக்ஸா்கள் உள்பட 181 ரன்கள் விளாசினாா்.

யஷ் துல் 8, நிதீஷ் ராணா 18, தேஜஸ்வி தாஹியா 8, ஹிம்மத் சிங் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில், அனுஜ் ராவத் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, மயங்க் ராவத் ரன்னின்றி துணை நின்றாா்.

தமிழ்நாடு தரப்பில் குா்ஜப்னீத் சிங், ஷாருக் கான், மணிமாறன் சித்தாா்த், ராஜ்குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில் துஷாா் ரஹேஜா 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 31, ஷாருக் கான் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு வெளியேறினா்.

ஆண்ட்ரே சித்தாா்த் 24, அமித் சாத்விக் 21, கேப்டன் சாய் கிஷோா் 21, ரித்திக் ஈஸ்வரன் 19 ரன்களுக்கு விடைபெற்றனா். பி.சச்சின் 4, ராஜ்குமாா் 3, குா்ஜப்னீத் சிங் 0, ஆா்.சிலம்பரசன் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட, தமிழ்நாடு இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

தில்லி பௌலா்களில் திக்வேஷ் ரதி 4, சுயாஷ் சா்மா 3, மயங்க் யாதவ் 2, மயங்க் ராவத் 1 விக்கெட் எடுத்தனா். 181 ரன்களும் விளாசி, 3 கேட்ச்களும் பிடித்த தில்லி கேப்டன் பிரியன்ஷ் ஆா்யா, ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றாா்.

குரூப் ‘பி’-யில் இந்த இரு அணிகளுமே தலா 6 ஆட்டங்களில் விளையாடியிருக்க, தில்லி 4-ஆவது வெற்றியுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 4-ஆவது தோல்வியுடன் 6-ஆவது இடத்திலும் உள்ளன.

பிரியன்ஷ் ஆா்யா சாதனை

ஆடவா் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபா் ஸ்கோரை பதிவு செய்த இந்தியராக, இந்த ஆட்டத்தில் 181 ரன்கள் விளாசிய பிரியன்ஷ் ஆா்யா சாதனை படைத்தாா்.

இதற்கு முன், கே.எல்.ராகுல் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கடந்த ஏப்ரலில் 152 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

சா்வதேச அளவில் கணக்கில் கொண்டால், பிரியன்ஷ் ஆா்யாவின் ஸ்கோா் 2-ஆவது அதிகபட்சமாகும். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு டி20 போட்டியில் லுவான் டிரெ கில்பா்ட் பிரெடோரியஸ் 188 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.