
44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற ஹாக்கி மகளிரணி..! ஒலிம்பிக்ஸ் 2028க்குத் தேர்வு!
ஆசிய விளையாட்டில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்ற மகளிர் ஹாக்கி அணி குறித்து...

தங்கப் பதக்கம் வென்ற மகளிர் ஹாக்கி அணி - படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா
ஆசிய விளையாட்டில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு 16ஆவது தங்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் லால்ரெம்ஸியாமி 10ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்தியாவின் கோல்கீப்பர் சவிதா பெனால்டியில் எதிரணிக்கு கோல் விடாமல் தடுத்தும் அசத்தினார்.
இந்த வெற்றியுடன் 44 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள். கடைசியாக 1982ல் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்தியாவுக்கு 16 தங்கம், 25 வெள்ளிம் 35 வெண்கலம் என மொத்தமாக 76 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்த வெற்றியுடன் மகளிர் ஹாக்கி அணி லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிற்கு நேரடியாகத் தகுதிபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ð§ðð ð°ð°-ð¬ððð¥ ðªððð§ ðð¦ ð¢ð©ðð¥, ð§ðð ðð¡ðððð¡ ðªð¢ð ðð¡'ð¦ ð§ððð ðð¦ ðð¦ððð¡ ððð ðð¦ ð®ð¬ð®ð² ðð¢ðð ð ððððððð¦ð§ð¦! ð®ð³ð¥
— Hockey India (@TheHockeyIndia) October 2, 2026
A 1-0 victory over World No. 4 China in the final seals a historic gold medal for the Indian Womenâs Team, securing⦠pic.twitter.com/ZiQP1PSYaD
Summary
After 44 years India are Asian Games champions in women’s hockey! The triumph also secures India a direct qualification to the LA 2028 Olympics.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






