செபக் டாக்ரோ போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டில் செபக் டாக்ரோ போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் அணி குறித்து...

Indian men's sepak takraw team

செபக் டாக்ரோ இந்திய ஆடவர் அணி - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டில் செபக் டாக்ரோ போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

செபக் டாக்ரோ என்ற புதிய போட்டியில் இந்திய அணி முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில், இந்திய ஆடவர் அணி 0-2 என ஜப்பானிடம் தோல்வியுற்று வெண்கலத்துடன் வெளியேறியது.

செபக் டாக்ரோ என்பது வாலிபால் போன்ற விளையாட்டு. ஆனால், பந்தை கைகளில் அல்லாமல் கால்களால் அடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.

கால்கள், முழங்கால், தலை, நெஞ்சுப் பகுதிகளைக் கொண்டு பந்தைக் கட்டுப்படுத்தி நால்வர் மட்டுமே ஓர் அணியில் விளையாடும் ஒரு புதிய விளையாட்டு முறையாகும். இதில் இந்தியா முதல்முறையாக வெண்கலம் வென்றுள்ளது.

இந்திய அணி இந்தப் பதக்கத்துடன் 75 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தால் இடத்தில் இருக்கிறது. இதில் 15 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் வென்றுள்ளன.

Summary

This historic podium finish marks India’s first-ever medal in the Men’s Quadrant event at the Asian Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER