பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஓய்வறையில் கொண்டாட்டம்; குழு நடனம்! வெற்றியைப் பகிர்ந்துகொண்ட ஹாக்கி மகளிர் அணி!

ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றதை ஓய்வறையில் குழுவாக நடனமாடி கொண்டாடினர்.

Hockey India

வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய மகளிர் அணி - படம் | Hockey India

Published On :

ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதை ஓய்வறையில் குழுவாக நடனமாடி கொண்டாடினர்.

இந்திய ஜெர்சி அணிந்தவாறு வீராங்கனைகள் நடனமாடி, சாம்பியன்.. சாம்பியன்.. என வெற்றி முழக்கமிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்திய ஹாக்கி மகளிர் அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு ஆசியப் போட்டியில் 76 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில், 16 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கங்களாகும்.

2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக ஆடி 4வது இடத்தைப் பிடித்தது; 2024 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெறும் வாய்ப்பை இந்திய மகளிரணி இழந்திருந்தது.

தற்போது ஆசியப் போட்டிகளில் கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய ஹாக்கி மகளிரணி தகுதிப் பெற்றுள்ளது.

இதனால் கூடுதல் மகிழ்ச்சியில் இந்திய மகளிரணி நடனமாடி வெற்றியைப் பகிர்ந்துகொண்டனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

Asian Games Celebrations in the dressing room a group dance The women's hockey team shared their victory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.