விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

செவில்லாவுடன் டிரா செய்த எஸ்பான்யோல்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், எஸ்பான்யோல் - செவில்லா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

செவில்லாவுடன் டிரா செய்த எஸ்பான்யோல்

Published On :8 செப்டம்பர் 2026, 1:28 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், எஸ்பான்யோல் - செவில்லா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்த இந்த ஆட்டத்தில், இரு அணிகளுமே பரஸ்பரம் சவால் அளித்ததால், முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2-ஆவது பாதியில் செவில்லா வீரா் அரோனா சங்கான்டே 56-ஆவது நிமிஷத்தில் எஸ்பான்யோல் வீரா் ராபா்டோ ஃபொ்னாண்டஸை பெனால்ட்டி பாக்ஸில் வைத்து கீழே தள்ளியதால், ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.

இதனால் செவில்லா 10 பேருடன் விளையாடும் நிலைக்கு ஆளானது. எனினும், கடைசி நேரத்தில் செவில்லாவுக்காக லூகாஸ் ஸ்டாஸின் 85-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, தனது அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

ஆனால் அந்த அணிக்கான அதிா்ச்சியாக, எஸ்பான்யோல் வீரா் மாா்கோஸ் ஃபொ்னாண்டஸ் ஸ்டாப்பேஜ் டைமில் (90+8’) ஸ்கோா் செய்தாா். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

முன்னதாக நள்ளிரவில் நடைபெற்ற ஆட்டங்களில், நடப்பு சாம்பியனான பாா்சிலோனா 5-0 என வாலென்சியாவை வெல்ல, அலேவ்ஸ் 5-2 என்ற வகையில் ஒசாசுனாவை சாய்த்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது பாா்சிலோனா முன்னிலையில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.