
லா லிகா: ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா!
லா லிகா கால்பந்துத் தொடரின் 2026/27 சீசனின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரபீனியா. - படம்: பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரின் 2026/27 சீசனின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை பார்சிலோனா வீரர் ரபீனியா வென்றார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரபீனியா பார்சிலோனா கால்பந்து அணியின் முதன்மை கேப்டனாக விளையாடி வருகிறார். நடப்பு 2026/27 சீசனில் அசத்தலாக விளையாடி வருகிறார்.
ஆகஸ்ட் மாதத்தில் லா லிகா தொடரில் மட்டுமே ரபீனியா 5 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தினார். லா லிகா தொடரிலேயே அதிக கோல்கள் அடித்தவராக முன்னேறியுள்ளார்.
எல்சி அணிக்கு எதிராக 2 கோல்கள், அத்லெடிக் பில்போ உடன் 1, ராயோ வெலான்சியோ உடன் 2 கோல்கள் அடித்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தினால் புள்ளிப் பட்டியலிலும் பார்சிலோனா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பார்சிலோனா வரலாற்றிலேயே முதல் நான்கு போட்டிகளிலும் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரபீனியா நான்காவது இடம் பிடித்துள்ளார். முன்னதாக ரோட்ரிகஸ் (1950/51), குபாலா (1953/54), கயேட்டானோ ரே (1964/65), ஸ்லடான் இப்ரமோவிச் (2009/10), செக் ஃபேப்ரெகெஸ் (2011/12) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்கள்.
முன்னதாக 2024 ஆகஸ்ட் மாதமும் இந்த விருதினை ரபீனியா வென்றிருந்தார். இது இரண்டாவது முறை என்பதும் கவனிக்கத்தக்கது.
பார்சிலோனா வரலாற்றிலேயே லியோனல் மெஸ்ஸி இந்த மாத விருதினை 8 முறையும் லமின் யமால், லூயிஸ் சௌரஸ் தலா 4 முறையும் லெவண்டாவ்ஸ்கி 3 முறையும் வென்றுள்ளார்கள்.
Qué mes de Raphinha. ð
— LALIGA (@LaLiga) September 11, 2026
ðâ¤ï¸ El jugador del @FCBarcelona_es es el ððððððð ððð ððð de agosto en #LALIGAEASPORTS.https://t.co/qnxpNg9Xpc#LALIGAPOTM | #PREMIOSLALIGA pic.twitter.com/SMrC2ncJfj
Summary
FC Barcelona player Raphinha La Liga Player of the Month for August 2026/27
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






