திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

பி.டி. உஷா சாதனை முறியடிப்பு! வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 30 லட்சம்! முதல்வர் அறிவிப்பு

வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு முதல்வர் விஜய் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது குறித்து...

Vidya Ramraj

வித்யா ராம்ராஜ். - படம் - எக்ஸ்

Published On :

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு முதல்வர் விஜய் திங்கள்கிழமை (செப். 28) ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷா, 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும்.

அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay announced an incentive of ₹30 lakh on Monday (Sept. 28) for Vidya Ramraj, who won a bronze medal at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.