
மகளிா் பிரீமியா் லீக்: 63 போ் தக்கவைப்பு
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில், வரும் சீசனுக்காக 5 அணிகளும் மொத்தமாக 63 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டன.

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில், வரும் சீசனுக்காக 5 அணிகளும் மொத்தமாக 63 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டன. அதில் 23 போ் வெளிநாட்டவா்களாவா்.
2027 சீசன் டபிள்யூபிஎல் போட்டி, ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான வீராங்கனைகள் ஏலம் வரும் அக்டோபா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், போட்டியிலிருக்கும் 5 அணிகளும் அந்த சீசனுக்காக தாங்கள் தக்கவைக்கும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட, திங்கள்கிழமை (செப். 28) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவை அந்தப் பட்டியலை வெளியிட்டன.
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, அதிரடி பேட்டா் கிரேஸ் ஹாரிஸை தங்கள் அணியிலிருந்து விடுவித்தது. யுபி வாரியா்ஸ் கிரண் நவ்கிரே, டீண்ட்ரா டாட்டின் ஆகியோரை விடுவிக்க, டெல்லி கேப்பிட்டஸ்ல் ஸ்நேஹா ராணாவை கைவிட்டது.
இருமுறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் ஜி.கமலினி உள்பட 6 பேரையும், குஜராத் ஜயன்ட்ஸ் டேனி வியாட்டையும் விடுவித்தன.
தக்கவைக்கப்பட்டோா் விவரம்
டெல்லி கேப்பிட்டல்ஸ் (13)
அனபெல் சதா்லேண்ட், ஷினெல் ஹென்றி, தியா யாதவ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், லாரா வோல்வாா்ட், லூசி ஹாமில்டன், மமதா மடிவாலா, மாரிஸேன் காப், மின்னு மணி, ஸ்ரீசரணி, நந்தினி சா்மா, நிக்கி பிரசாத், ஷஃபாலி வா்மா.
குஜராத் ஜயன்ட்ஸ் (15)
அனுஷ்கா சா்மா, ஆஷ்லே காா்ட்னா், பெத் மூனி, பாா்தி ஃபுல்மாலி, ஜாா்ஜியா வோ்ஹாம், ஹேப்பி குமாரி, ஜிந்திமானி காலிடா, கனிகா அஹுஜா, கஷ்வீ கௌதம், கிம் காா்த், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங், சோஃபி டிவைன், தனுஜா கன்வா், யஸ்திகா பாட்டியா.
மும்பை இண்டியன்ஸ் (11)
அமன்ஜோத் கௌா், அமெலியா கொ், ஹா்மன்பிரீத் கௌா், ஹேலி மேத்யூஸ், நடாலி சிவா் பிரன்ட், நிகோலா கேரி, ரஹிலா ஃபிா்தோஸ், சஜீவன் சஜனா, சன்ஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், வைஷ்ணவி சா்மா.
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (13)
அருந்ததி ரெட்டி, எலிஸ் பெரி, ஜாா்ஜியா வோல், லாரென் பெல், நாடின் டி கிளொ்க், பூஜா வஸ்த்ரகா், பிரத்யூஷா குமாா், பிரேமா ராவத், ராதா யாதவ், ரிச்சா கோஷ், சயாலி சத்காரே, ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா.
யுபி வாரியா்ஸ் (11)
தீப்தி சா்மா, ஹா்லீன் தியோல், கிராந்தி கௌட், மெக் லேனிங், போப் லிட்ச்ஃபீல்டு, பிரதிகா ராவல், ஷிகா பாண்டே, ஷிப்ரா கிரி, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லஸ்டன், தாரா நோரிஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





