தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பயிற்சியாளர் இல்லாமல் என்னால் எதையும் செய்திருக்க முடியாது: பளு தூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானு!

பயிற்சியாளர் இல்லாமல் என்னால் எதையும் செய்திருக்க முடியாது என்று இந்திய பளு தூக்குதல் வீராங்கானை பேசியது குறித்து...

Mirabai Chanu

மீராபாய் சானு. - படம் - பிடிஐ

Published On :

பயிற்சியாளர் இல்லாமல் என்னால் எதையும் செய்திருக்க முடியாது என்று ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற இந்திய பளு தூக்குதல் வீராங்கானை மீராபாய் சானு இன்று (செப். 29) பேசினார்.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 198 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த வெற்றிக்குப் பிறகு, இன்று இந்தியா வந்தடைந்த மீராபாய் சானு பேசியதாவது:

ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அடுத்த போட்டிக்குத் தயாராவதும் மிகவும் கடினம். இருப்பினும், எனக்கு பளுதூக்குதல் விளையாட்டு மிகவும் பிடிப்பதால், அதற்காக ஏதாவது செய்ய விரும்பினேன். என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்பினேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குப் பின்னால் இருந்து ஆதரவளித்தவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக, என்னுடைய பயிற்சியாளர் விஜய் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். ஏனென்றால் ஒரு பயிற்சியாளர் இல்லாமல் என்னால் எதையும் செய்திருக்க முடியாது.

ஆட்ட உத்திகளில் மாற்றங்களைச் செய்வதாக இருந்தாலும் சரி, ஒரு போட்டியின் போது நாம் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருந்தாலும் சரி, மிகச் சிறிய விஷயங்களில் கூட அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். ஒவ்வொரு சிறிய விஷயமும் மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

Summary

Indian weightlifter Mirabai Chanu, who won a silver medal at the Asian Games, said that she cannot do anything without a coach.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.