
தடகளத்தில் முதல் தங்கம்... இந்த மகளிரணியில் தமிழக வீராங்கனையும் பங்கேற்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026ல் தடகளத்தில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய மகளிரணி குறித்து...

தங்கம் பெற்றுத் தந்த தங்க மங்கைகள். - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026ல் தடகளத்தில் இந்திய மகளிரணி உதவின் மூலமாக முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான 4*100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் கிரண், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்கள்.
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிஷங்கள் 29.69 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார்கள். இந்த ஆசிய விளையாட்டில் இதுதான் தடகளத்துக்கு முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தடகளத்தில் குல்வீர் சிங் 2 வெள்ளியும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். பூஜா சிங்கும் வெண்கலம் வென்றுள்ளார். யாருமே தங்கம் வெல்லாத நிலையில், மகளிரணி தடகளத்தில் தங்கம் வென்று கொடுத்து நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளது.
இந்த மகளரணியில் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ் பங்கேற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்தியாவுக்கு 6 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலத்துடன் 51 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
Summary
India wins first athletics gold of 2026 Asiad with top podium finish in women 4x400m relay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







