இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியைக் காட்டி வழிப்பறி: இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :7 ஏப்ரல் 2015, 1:01 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோ.புதூரைச் சேர்ந்தவர் க.முத்துராஜ் (41). இவர் இரு சக்கர வாகனத்தில் லட்சுமியாபுரத்தில் வெங்காயம் வாங்குவதற்காக, கிருஷ்ணன்கோவில்-அழகாபுரி சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார். வண்டியை குன்னூர் விலக்கு அருகே நிறுத்தியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சுமார் 25-30 வயது மதிக்கத்தக்க இருவர் வந்து, வாகனத்தை மறித்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் இருவரும் கத்தியைக் காட்டி, முத்துராஜ் வைத்திருந்த பணம் ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டார்களாம். இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் முத்துராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டியைச் சேர்ந்தவர் ப.கணேசன் (44). இவர் வாழைக்குளம் ஒத்தத்தெரு வழியே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், கணேசனை வழிமறித்து கத்தியைக் காட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.600 ஐ பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கணேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட டி.கல்லுப்பட்டி, வெங்கடசலாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுப்புராஜ், சிவகாசி-முதலிபட்டியைச் சேர்ந்த ஊர்காவலன் மகன் மாரிமுத்து ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் கருவூலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களா? என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.