இளைஞர் மற்றும் மகளிருக்கான இலவச தொழிற் பயிற்சிகள்
விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இளைஞர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனம் மூலம் இலவசமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இளைஞர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனம் மூலம் இலவசமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி, செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் படிக்காத மற்றும் படிப்பைத் தொடர இயலாத பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வயது வந்தோர் கல்வித் துறையின் உதவியுடன், மாதாஅமிர்தானந்தமயி மடம் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்கள் கல்வி நிறுவனம் மூலம் 2015-16-ம் ஆண்டிற்கான தொழிற் பயிற்சிகள் விருதுநகர் மாவட்டம் முழுவதும் தொடங்கப்படவுள்ளன.
பெண்களுக்கு தையல்கலை, அழகு கலை, மென் பொம்மைகள் தயாரித்தல், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், ஆரி மற்றும் சர்தோஷி வேலைப்பாடுகள், சேலையில் பிரிண்டிங் செய்தல், உல்லன் வேலைப்பாடுகள், மெஷின் மற்றும் கை எம்பிராய்டரி, சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளும், ஆண்களுக்கு எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், பிளம்பிங், இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல் ஆகிய பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன.மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இத் தொழிற் பயிற்சிகள் அனைத்தும் பயனாளிகள் சார்ந்துள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பகுதி நேரம் தினமும் 2 மணி நேரப் பயிற்சியாக மாவட்டம் முழுவதும் வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவற்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட படிக்காத மற்றும் படிப்பை இடையில் நிறுத்தியவர்களும், மகளிர்/இளைஞர் மற்றும் சுயதொழில் செய்வதற்கு ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் இப் பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம். தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் இயக்குநர், மக்கள் கல்வி நிறுவனம், 4/92 ஏ, அழகுதேவன்குளம் ரோடு, ஆவாரம்பட்டி, ராஜபாளையம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04563-232213 என்ற தொலைபேசியில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...