கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழையால் நான்காவது நாளாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

தொடர் மழையால் புதுச்சேரியில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2015, 10:43 am

சுஜித்குமார்

தொடர் மழையால் புதுச்சேரியில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முக்கிய சந்திப்புகளான இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய பகுதிகளில் மழைவெள்ளம் இடுப்பு அளவிற்கு தேங்கியது.

இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல வெங்கட்டா நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், பாவாணர் நகர், பூமியான்பேட் உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்யவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளம் மெதுவாக வடிய தொடங்கியது.

ஆனாலும் இந்திராகாந்தி சிலை பகுதியில் தேங்கியிருந்த நீர் வெளியேறவில்லை. தொடர்ந்து 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. பாவாணர்  நகர், பூமியான்பேட்டை, நடேசன் நகர் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறவில்லை.

சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.