கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த கோரிக்கை
தமிழகத்தில் நல்ல வருவாய் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள 200 கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு பேரூராட்சி


தமிழகத்தில் நல்ல வருவாய் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள 200 கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ், முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு தற்போது 180 பேரூராட்சிகளை, தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலாவது கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்திவிட்டு பின்னர், பேரூராட்சிகளை தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் நல்ல வருவாய் மற்றும் கூடுதல் மக்கள் தொகையுள்ள முகவூர், தளவாய்புரம், ஆலங்குளம், சத்திரப்பட்டி, கூரைக்குண்டு ஆகிய 6 கிராம ஊராட்சிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 200 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி, அதற்கான செயல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிவிட்டு, பேரூராட்சிகளை தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இக் கோரிக்கை மனு உள்ளாட்சித் துறை அமைச்சர், பேரூராட்சிகளின் இயக்குநர், உள்ளாட்சித் துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...