இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராணுவ வீரர் மனையுடன் தகாத தொடர்பு: ஆசிரியர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராணுவ வீரர் மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்த ஆசிரியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள

News image
Updated On :15 மார்ச் 2015, 3:05 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராணுவ வீரர் மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்த ஆசிரியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நாச்சியார்பட்டி-ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் சஞ்சைகுமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பாப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமா (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் பெண் குழந்தை உண்டு.இந்நிலையில் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் ரா.உதயசூரியன் (47). இவர் பாப்பையநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது வகுப்பில் படித்த மாணவி ரமாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உதயசூரியன், ராஜபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து விட்டு தற்போது சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது குடும்பம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ளது. இருந்தபோதிலும் ரமாவுடனான உறவு உதயசூரியனுடன் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே பட்டாதாரி ஆசிரியர் பணிக்கு படித்துள்ள ரமா, அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இங்கு வ.புதுப்பட்டியைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் சங்கர்ராம் (33) என்பவர் வேலை செய்து வருகிறார். இவருடன் ரமாவிற்கு தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

11.12.14-ம் தேதி இரவு ராஜகோபாலபுரத்தில் உள்ள மாமனார் வீட்டில், இரவு ஆசிரியர் சங்கர்ராமுடன் ரமா தனிமையில் இருந்துள்ளார். சப்தம் கேட்டு மாமனார் ரெ.ஸ்ரீராமுலு (65) சென்று பார்த்துள்ளார். சங்கர்ராம் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அவரது சட்டையை ஸ்ரீராமுலு பிடித்துக் கொள்ள, அதனை விட்டுவிட்டு சங்கர்ராம் தப்பி, வீட்டின் வெளியே வந்து, ஸ்ரீராமுலுவை ஆபாசமாக பேசியதுடன், ரமாவிற்கு ஏதாவது ஆனால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.

இது குறித்து தகவல் ரமாவின் கணவர் சஞ்சைகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ரமாவை விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ரமா, அப்படி செய்தால் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.இதற்கிடையே மாமனார் ரெ.ஸ்ரீராமுலு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் தி.சங்கர்ராம் மற்றும் ரா.உதயசூரியன் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சங்கர்ராமை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தினர். நீதிபதி கே.கவிதா, சங்கர்ராமை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். ஆசிரியர் உதயசூரியனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.