விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க ஆணை
ராஜபாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3,36,500 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம்


ராஜபாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3,36,500 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையம், நக்கனேரியைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் மணி (45). இவர் தனியார் நூற்பு ஆலையில் வேலை செய்து வந்தார். 21.7.13-ம் தேதி இரவு ராஜபாளையம்-தென்காசி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த புரூஸ்லி என்பவர் ஓட்டி வந்த அரசு போக்குவரத்குக் கழகப் பேருந்து மணி மீது மோதியது. இதில் இவரது ஒரு கால் பாதிக்கப்பட்டு செயலிழந்தது. இதனையடுத்து மணி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், மதுரைக் கோட்ட அரசுப் போக்குவரததுக் கழகம், மணிக்கு ரூ.3,36,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...