இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்: அதிக பணம்-நகை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தன. பிரசாரம் மேற்கொள்ளுதல், சுவர் விளம்பரம் செய்தல் போன்றவற்றுக்கு

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தன. பிரசாரம் மேற்கொள்ளுதல், சுவர் விளம்பரம் செய்தல் போன்றவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
 செய்யக் கூடாதது என்ன? நிதியுதவி தொடர்பான எந்தவொரு அறிவிப்புகளையும் மாநில அரசு வெளியிட முடியாது. அரசு சார்பில் வாக்குறுதிகளோ, புதிய திட்டங்களோ, புதிய திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கீடோ செய்யக் கூடாது.
 அமைச்சர்களோ அல்லது அரசியல்வாதிகளோ புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ, தொடக்க விழாக்களில் பங்கேற்கவோ கூடாது. அரசுத் துறையைச் சேர்ந்தவர்களோ அல்லது அரசியல்வாதிகளோ சாலை அமைத்துத் தருவது குறித்தோ, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவோ எந்த வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.
 புதிய நியமனங்கள் கூடாது: அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் புதிதாக எந்த நியமனங்களையும் செய்யக் கூடாது. பணியில் உள்ளவர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது. ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியினை நோக்கி, வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அமையும் என்பதால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.
 அமைச்சர்கள் தேர்தல் பணிகளுடன் இணைத்து தங்களது அலுவல் பணிகள் மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் பணிகளில் அரசு இயந்திரத்தையோ, தங்களுக்குச் சாதகமாக அரசுப் பணியாளர்களையோ அமைச்சர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
 குழுக்கள் அமைப்பு: பணம், பரிசு பொருள்கள் கொடுத்து வாக்காளர்களைக் கவரும் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பறக்கும் படைகள், கண்காணிப்புப் படைகள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், வரவு-செலவுகளைக் கண்காணிக்கும் குழுக்கள் போன்றவை உடனடியாக உருவாக்கப்படும்.
 ஆவணங்கள் அவசியம்: வாக்காளர்களைக் கவரும் வகையில், வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிக்க பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதும், ஆள்பலத்தைப் பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றச்செயலாகும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும் கடும் குற்றத்துக்கு உரியது.
 எனவே, பொது மக்கள் அதிக பணத்தையோ, நகை போன்ற விலை உயர்ந்த பொருள்களையோ எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்ய நேரிடலாம்.
 விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள்: நகரங்களில் பொது, தனியார் இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்படும்.
 கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள், அரசு கட்டடங்கள் போன்றவற்றில் விளம்பரங்கள் செய்யக் கூடாது. அதேசமயம், தனியார் சுவர்கள், கட்டடங்களில் விளம்பரம் செய்யும் போது சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்று இருக்க வேண்டும். இந்த ஒப்புதல் கடிதம் தேர்தல் நடத்தும் அதிகாரியால் பாதுகாத்து வைக்கப்படும். இதுபோன்ற பல்வேறு தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
கொடிகள்-பேனர்கள் தொந்தரவாக இருக்கக் கூடாது: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு
 தேர்தல் பிரசாரம் செய்யும்போது, கொடிகள்-பேனர்கள் ஆகியன பிறருக்கு எந்தவகையிலும் தொந்தரவாக இருக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெள்ளிக்கிழமை கூறியது:-
 வெவ்வேறு ஜாதிகள், சமயம், மொழி, சமுதாயத்தினருக்கு இடையே இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்துகின்ற அல்லது பரஸ்பரம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்ற அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
 வாக்குகளைப் பெறுவதற்காக ஜாதி, சமுதாய உணர்வுகளின் அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கக் கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், திருக்கோயில்கள், பிற வழிபாட்டு இடங்களைப் பிரசாரம் செய்வதற்கான இடங்களாகப் பயன்படுத்தக் கூடாது.
 கூட்டங்கள்: அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ள இடம், நேரம் குறித்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். கூட்டம் தொடர்பாக ஒலிபெருக்கியோ அல்லது வேறு வசதிகளுக்கான அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டி இருந்தால், முன்னதாகவே விண்ணப்பித்து அதனைப் பெற வேண்டும்.
 விளம்பரக் கொடிகளோ அல்லது பேனர்களோ பிறருக்கு தொந்தரவாக அமையக் கூடாது. அரசுக்குச் சொந்தமான ஓய்வு இல்லங்கள், பயணிகள் தங்குமிடங்கள், அரசுக்குச் சொந்தமான ஏனைய தங்கும் இடங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
 அதேசமயம், அந்த இடங்களைப் பிரசாரம் செய்யும் நோக்கத்துக்காகவோ அல்லது பிரசார அலுவலகங்களாகவோ மாற்றி பயன்படுத்தக் கூடாது என்றார் ராஜேஷ் லக்கானி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.