கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

9 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார் கருணாநிதி

காவேரி மருத்துவமனையில் இருந்து 9 நாள் சிகிச்சைக்குப் பின்னர், திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பினார்.

News image
வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி. உடன், அவரது மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு.
Updated On :23 டிசம்பர் 2016, 11:40 pm

DIN

காவேரி மருத்துவமனையில் இருந்து 9 நாள் சிகிச்சைக்குப் பின்னர், திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பினார்.
தொண்டை, நுரையீரல் ஏற்பட்ட தொற்று காரணமாக, மூச்சுத் திணறலுக்கு உள்ளாகிசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி டிசம்பர் 15-இல் அனுமதிக்கப்பட்டார்.
சுவாசத்தை இலகுவாக்கும் வகையில் அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சையுடன், எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகளும் அளிக்கப்பட்டன.
இந்தச் சிகிச்சையில் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, 9 நாள்களுக்கு பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து மாலை 4.40 மணியளவில் கருணாநிதி தனது சொந்த காரில் புறப்பட்டு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, மகள் செல்வி உள்பட குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.
வழியெங்கும் திமுகவினர் ஆங்காங்கே நின்று வரவேற்றனர். இதையொட்டி, மருத்துவமனைஅருகேயும், அவர் சென்ற சாலைகளில் காவலர்களால் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டது.
டிரக்யாஸ்டமி குழாய் இருக்கும்: இந்த நிலையில், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.அரவிந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
உடல் நலம் பூரண குணமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்பினார். அவருக்கு அளிக்கப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளுக்கான கால அளவும் நிறைவடைந்தது.
எனினும், கருணாநிதிக்குப் பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி குழாய் மேலும் சில வாரங்களுக்கு அப்படியே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதனால், சிகிச்சை, செவிலியர் சேவையை காவேரி மருத்துவமனை வீட்டிலேயே தொடர்ந்து அளிக்கும். முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், பார்வையாளர்களைத் தவிர்க்க அறிவுரைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழு எப்போது? திமுக துணைத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதற்காக, கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 20-இல் நடைபெற இருந்தது. கருணாநிதியின் உடல் நலம் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பூரணமாக முடிவடைந்ததும் பொதுக் குழுவின் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.