சுகாதார தினத்தில் சுகாதார அமைச்சர், அதிகாரிகள் வீட்டில் சோதனை தலைகுனிவு: மா.சுப்பிரமணியன்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க


சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது இன்றைய தினத்தின் நோக்கமாகும்.
அப்படிப்பட்ட இன்றைய தினத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக வந்த புகார்களை அடுத்து வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 5.30 மணி முதல் தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு, கல்லூரி, கல் குவாரி, அவரது உறவினர்கள் வீடு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அமைச்சர் வீட்டின் சோதனையைத் தொடர்ந்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் டி.டி.வி. தினகரனின் ஆதரவளருமான சரத்குமாரின் சென்னை கொட்டிவாக்கம் இல்லத்தில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டனர்.
இதேபோன்று அதிமுக முன்னாள் எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஜி,ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் உள்ள 5 அறைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலும், சுகாதாரத்துறை இயக்குநரின் நந்தபாக்கம் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை சேர்ந்த அமைச்சர், அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர்.
உலக சுகாதார தினமான இன்றைய தினத்தில் சுகாதார அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு என மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அமைச்சர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...