/

அதிமுக அம்மா அணியில் 19 எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிப் பொறுப்பு: டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:35 pm

DIN

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது ஆதரவாளர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள 19 பேருக்கு கட்சிப் பொறுப்புகளை டிடிவி தினகரன் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
அதிமுக அம்மா அணியின் புதிய அமைப்புச் செயலாளர்கள்: முன்னாள் அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுமான பி.பழனியப்பன், வி.செந்தில் பாலாஜி, தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், சி.சண்முகவேலு, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா, முக்கூர் என்.சுப்பிரமணியன், கே.சி.பச்சைமால், ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் ஆர்.மனோகரன், சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி, ஆர்.பி.ஆதித்தன், எஸ்.காமராஜ், எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மேலூர் ஆர்.சாமி.
கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்: நாஞ்சில் சம்பத், ஆ.இளவரசன்.
தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்கள்: ஆர்.தங்கதுரை, திருப்பூர் சி.சிவசாமி.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்: தலைவர்-கே.கே.சிவசாமி, இணைச் செயலாளர்கள் வ.து.நடராஜன், எம்.ராதாகிருஷ்ணன், வி.சுகுமார்பாபு. துணைச் செயலாளர்கள் நேதாஜி கணேசன், எம்.சௌந்தரபாண்டியன், ஆர்.வடிவேல்.
புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்: இணைச் செயலாளர்கள்: சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி, எஸ்.மாரியப்பன் கென்னடி, டி.ஏ.எழுமலை, கே.பழனி, எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்-இசக்கி சுப்பையா, மைக்கேல் எஸ்.ராயப்பன், தொட்டியம் ராஜசேகர். துணைச் செயலாளர்கள்: ம.கரிகாலன், எஸ்டிஎஸ் செல்வம், ப.ராஜேஸ்வரன், ஞானகலைச்செல்வன்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகள்: இணைச் செயலாளர்கள்---சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.ஆர்.முருகன், ஆர்.சுந்தரராஜ், எம்.கோதண்டபாணி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்.
மகளிர் அணி நிர்வாகிகள்: இணைச் செயலாளர்கள்----சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயந்தி பத்மநாபன், சத்யா பன்னீர்செல்வம், உமாமகேஸ்வரி, எம்.சந்திரபிரபா.
விவசாயப் பிரிவு: இணைச் செயலாளர்---சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ்.
மருத்துவ அணி நிர்வாகிகள்: தலைவர்--பரமக்குடி எஸ்.முத்தையா, கே.கதிர்காமு.
19 எம்.எல்.ஏ.-க்கள் யார், யார்?
டிடிவி தினகரனின் அதிமுக அம்மா அணியில் தற்போதுள்ள 19 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, வி.செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு என்.டி.வெங்கடாசலம், ஜக்கையன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, எஸ்.மாரியப்பன் கென்னடி, ஏழுமலை, கே.பழனி, எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஆர்.ஆர்.முருகன், சுந்தரராஜ், எம்.கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், சத்யா, உமா மகேஸ்வரி, சந்திரபிரபா, ஏ.கே.போஸ், எஸ்.முத்தையா, கதிர்காமு ஆகிய 19 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பொறுப்புகளை டிடிவி தினகரன் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.