கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க கோரிக்கை

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குப் பணி நியமனங்கள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்

News image
Updated On :9 நவம்பர் 2017, 8:15 pm

DIN

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குப் பணி நியமனங்கள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்ட அறிக்கை: 2017-18-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஏற்கெனவே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தகுதியானவர்களின் தேர்ச்சிப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் பட்டியலை மட்டும் உரிய காரணங்கள் இன்றி ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்தச் செயல் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிரானது. இந்தச் செயல் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. இதனை எங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி அல்லாதவர்களின் சான்றிதழ்களைச் சரி பார்க்கும் பணி நவம்பர் 23-இல் தொடங்கி நவம்பர் 25-ஆம் ததி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இச்செய்தி அறிந்த, தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
எனவே, தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். பிறகு, சான்றிதழ் சரிபார்ப்புகளுக்கு அவர்களும் அழைக்கப்பட்டு, அவர்களுக்கும் பணி நியமனங்கள் வழங்க வேண்டும். 
இது குறித்து உரிய உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை எங்கள் சங்கம் வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.