கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா? சு.திருநாவுக்கரசர் விளக்கம்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:57 pm

DIN

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் இல்லத்தில் சு.திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
ப.சிதம்பரத்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டும் நடைபெறும் ஒன்றல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தில்லி தலைமைக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் அரசியல் கருத்துகள் வைப்பது ஒன்றும் தவறில்லை. தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசரை மாற்ற அகில இந்திய தலைமையை வலியுறுத்த வேண்டும் என்று ப.சிதம்பரத்தைச் சந்தித்து தமிழகத் தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்தே ப.சிதம்பரத்தைச் சந்தித்து திருநாவுக்கரசர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.