கேரள வெள்ள பாதிப்பு: ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விக்ரம்
கேரளாவில் நிகழ்ந்துள்ள வரலாறு காண வெள்ள சேதத்திற்கு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.


கொல்கத்தா: கேரளாவில் நிகழ்ந்துள்ள வரலாறு காண வெள்ள சேதத்திற்கு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
"கடவுளின் தேசம்" என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி விட்டது. இதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் , அமைப்புகளும் திரைத்துறை சார்ந்தவர்களும் மற்றும் தனி நபர்களும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில் கேரள வெள்ள சேதத்திற்கு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...