தஞ்சாவூர்: சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் பெற்ற வெற்றி திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், தஞ்சையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியது:
ஆர்.கே.நகர் தேர்தலில் பெற்ற வெற்றி திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலிலும் பிரதிபலிக்கும். குக்கர் சின்னம் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து தொழில்களும் நலிவடைந்துவிட்டன. மேலும், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எனவே, இது தோல்வியடைந்த திட்டம்.
ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரும் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாய சங்கத் தலைவர்களும் கூறுகின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி, அதிகாரத்துக்கு வந்துவிட்டோம் என்பதற்காக, வானளாவிய அதிகாரம் இருப்பதாகக் கருதி, அதிகார துஷ்பிரயோகம் செய்து மனித உரிமை செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது நிச்சயம் முடிவுக்கு வரும் என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு பாராட்டு

சுதந்திர தின விழாவில் ரூ.57 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

கோவைக்கு சிறந்த மாநகராட்சி விருது: முதல்வா் ச. ஜோசப் விஜய் வழங்கினாா்

கேத்தனூர்: சுதந்திர தின நாளில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


