தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மக்களே உஷார்! மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தாதவர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!

கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில்  நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2019, 7:30 am

DIN


சென்னை: கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில்  நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துவருகிறார்கள்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில்  நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காதவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20க்குள் அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், 36,507 கட்டடங்களில் இருக்கும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காத 69,490பேருக்கு வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு அமைப்பின் மூலமாக, சென்னையில் 4 அடி அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.