சென்னை: கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் மர்ம மரணங்கள் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதனை முதல்வர் பழனிசாமி மறுத்து வருகிறார்.
இந்நிலையில் கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது
அதிமுகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. பிரதமர் மோடியின் ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது, ஆனாலும் அவர் மீது எந்த ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
தொடர்ந்து தன மீது அவதூறுகள் கூறப்பட்டு வரும் கோடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க, முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் கூட இறங்குவார்.
இவவறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் மோட்டார்ஸ் 4வது காலாண்டு லாபம் 22% சரிவு!
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்!

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!
ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!
விடியோக்கள்

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

