குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

முதல்முறையாக கனடியன் ஓபனில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்!

கனடியன் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் முதல்முறையாக வென்ற இகா ஸ்வியாடெக் குறித்து...

Poland's Iga Swiatek holds her trophy after defeating Kazakhstan's Elena Rybakina in a National Bank Open final tennis match, in Toronto, Thursday, Aug. 13, 2026. (Chris Young/The Canadian Press via AP)

கனடியன் ஓபன் கோப்பையுடன் ஸ்வியாடெக். - படம்: ஏபி

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:58 pm IST

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினார்கள். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஸ்வியாடெக் பட்டம் வென்றார்.

ரைபகினா முதல்முறையாக இந்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால், அவரது கனவை இகா ஸ்வியாடெக் முறியடித்துள்ளார்.

இந்தாண்டின் டபிள்யூடிஏ டூரில் இகா ஸ்வியாடெக் தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார். மொத்தமாக, இதுவரை 26 பட்டங்கள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

8 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்வியாடெக் இந்தப் போட்டியை 75 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார். வெற்றிக்குப் பிறகு, “நான் நல்ல மனநிலையில் இருந்தேன். இந்தப் போட்டியை உடல் ரீதியாக கடினமானதாக மாற்ற விரும்பினேன்” என்றார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்தாலும் பட்டம் வென்று அசத்தினார். பின்னர், இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Summary

Swiatek beats Rybakina in Toronto for her first WTA Tour title of the year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.