கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

News image
Updated On :14 நவம்பர் 2019, 10:40 am

DIN


சென்னை: தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்த ஆண்டும் நவம்பர் 15 முதல் ஐனவரி 20-ம் தேதி வரை, சென்னையிலிருந்து 55 பேருந்துகளும், திருச்சியிலிருந்து 2 பேருந்துகளும், மதுரையிலிருந்து 2 பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகள் என மொத்தம் 64 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. 

பக்தா்களின் வருகைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், 60 நாள்களுக்கு முன்னதாக சிறப்புப் பேருந்துகளுக்கான வலைத்தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு  9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையினை பக்தா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.