இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை தொடங்கியது!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

News image
Updated On :6 ஜனவரி 2020, 9:55 am

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் தரவரிசையில் மாநில அளவில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18ம் ஆண்டுக்கான குரூப் 2ஏ தேர்விலும் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து தேர்வு எழுதியவர்கள் 30க்கும் மேற்பட்டோர் முதல் 50 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

குரூப் 4 தேர்வு, 2017-18ம் ஆண்டின் குரூப் 2ஏ தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாவட்ட தேர்வர்கள் எத்தனை பேர் ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்என்றும்  குற்றச்சாட்டு எழுந்துள்ள மையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017-18ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வுக்கான பணிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.