காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி  பட்டப் படிப்புகளின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில்  மத்திய - மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழு பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்

News image
இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated On :20 ஜூலை 2020, 10:37 am

DIN

சென்னை: பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி  பட்டப் படிப்புகளின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில்  மத்திய - மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழு பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர்  வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகள் கரோனா நோய்த் தொற்றுக்கான தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.  பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த சூழலில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு செப்டம்பர் மாதம் குறையும் எனவும், பள்ளி, கல்லூரிகள் வரும்  2021 - ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்க முடியும் என கூறப்படுகிறது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகிவிடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது அவர்களின் சீனியாரிட்டியை பாதிக்கும். எனவே  தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மேலும் தேர்வு நடத்தவும் தற்போது வாய்ப்பில்லை. எனவே இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கூட அனுமதிசீட்டு பெற்ற அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக்குழு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.