காரைக்காலில் இருந்து 290 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு
புலம்பெயர்ந்த மேற்கு வங்கம், அசாம் மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 290 பேர் காரைக்காலில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.


புலம்பெயர்ந்த மேற்கு வங்கம், அசாம் மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 290 பேர் காரைக்காலில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 142 பேர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 148 பேர் என 290 பேர் முன் பதிவு செய்திருந்தபடி, காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக இவர்கள் அந்தந்த பகுதிகளிலிருந்து பி.ஆர்.டி.சி. பேருந்தில் மாவட்ட ஆட்சியரகம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆதார் பரிசோதனை செய்து, ரயில்வே நிர்வாகத்தால் டிக்கெட் தரப்பட்டது. ரயில் நிலையத்தில் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகியவை சார்பில் சப்பாத்தி, ரொட்டி, குளிர்பானம், குடிநீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ரயில் நிலையத்தில் தொழிலாளர்கள் இருந்த சிறப்பு ரயிலை கொடியசைத்து இயக்கிவைத்தார். அனுப்பிவைக்கும் நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் தொழிலாளர் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த சிறப்பு ரயில் புதுச்சேரி சென்று அங்குத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை ஏற்றிக்கொண்டு மேற்கு வங்கத்துக்கு 6-ஆம் தேதியும், அசாம் 7-ஆம் தேதியும் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...