சென்னையில் குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்வு
சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 12,059 பேர் (9%) சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 12,059 பேர் (9%) சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களில் 1,23,851 பேர் குணமடைந்துள்ளனர். 12,059 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,814 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகதில் 1418 பேரும், கோடம்பாக்கத்தில் 1391 பேரும் அடையாறில் 1055 பேரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 390 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதே வேளையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் தான் கரோனா பாதித்தவர்களில் தலா 14 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...