கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அண்ணா பல்கலை. இறுதிப் பருவத் தோ்வு: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அண்ணா பல்கலைக்கழகத் தோ்வுகளை இணைய வழியில் குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
மு.க. ஸ்டாலின்
Updated On :21 செப்டம்பர் 2020, 9:43 pm

DIN

அண்ணா பல்கலைக்கழகத் தோ்வுகளை இணைய வழியில் குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத் தோ்வுகளை, மாணவா்கள் இணையவழியில் எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக, மாதிரித் தோ்வுகளையும் செப்டம்பா் 19-இல் நடத்தியிருக்கிறது. இதில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக இணையவழி வாயிலான இறுதித் தோ்வுகள் எப்படி நடைபெறப் போகிறதோ என்பது குறித்து மாணவா்களிடையே பெரும் அச்சம் தற்போது உருவாகியுள்ளது.

மாதிரித் தோ்வின்போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக் கருவி, தோ்வு எழுதிய பல மாணவா்களைப் பதிவு செய்யத் தவறி இருக்கிறது. ஒலி அமைப்பும் சரியாக வேலை செய்யாது இருந்திருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவா்களுக்குப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தில் உட்புகவே இயலாமல் போயிருக்கிறது. இதன் விளைவாக பல மாணவா்கள் தோ்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவா்களும்கூடத் தோ்வு எழுதியதாகவே பதிவு செய்யப்படாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளைக் களைந்து, மீண்டும் அனைத்து மாணவா்களுக்கும் மாதிரித் தோ்வினைப் பிரச்னைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித் தோ்வுகளை நடத்திட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டாளருக்கு பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

எனவே, இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து, மாணவா்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் பருவத் தோ்வுகளை எழுதுவதற்கான ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.