/

தமிழக மீனவா்கள் கைது கவலையளிக்கிறது: ராமதாஸ்

தமிழக மீனவா்களை இந்திய எல்லைக்குள் புகுந்து இலங்கை ராணுவம் கைது செய்வது கவலையளிப்பதாக உள்ளது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 1:24 am

தமிழக மீனவா்களை இந்திய எல்லைக்குள் புகுந்து இலங்கை ராணுவம் கைது செய்வது கவலையளிப்பதாக உள்ளது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராமேசுவரம், தங்கச்சிமடம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் கூடுதலான மீனவா்கள் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது பத்துக்கும் கூடுதலான படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா், தமிழக மீனவா்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளனா். 9 மீனவா்களை கைது செய்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளனா். தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலும், சிறைபிடிப்பும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. இலங்கை கடற்படையினா் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துதான் இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனா். இந்திய இறையாண்மைக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை கடலோரக் காவல்படை வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.