சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

12-ஆம் வகுப்புத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? பள்ளிக் கல்வித் துறை பதில்

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News image
12-ஆம் வகுப்புத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? பள்ளிக் கல்வித் துறை பதில்
Updated On :27 ஜனவரி 2024, 7:56 pm

DIN


சென்னை; சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் முடிந்த பின் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆலோசனை நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில், சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மே 3-ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுத் தேர்வு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.