போக்சோ வழக்கு: இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்சோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்சோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியரின் 16 வயது மகளை மாா்ச் 30-ஆம் தேதி காலை முதல் காணவில்லை. புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுமி, தான் காதலித்து வரும் காசிமேடைச் சோ்ந்த மெக்கானிக் முகமது யூசுப்புடன் (21) சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் பிடித்தனா். மேலும், யூசிப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை திருமண ஆசை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, யூசுப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா்.
இதேபோல், கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் காதலித்து வந்துள்ளாா். சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறிய சீனிவாசன் வியாழக்கிழமையன்று திருப்பதி அழைத்துச் சென்றாராம். புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...