320 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
குன்றத்தூரில் 320 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.


குன்றத்தூரில் 320 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
குன்றத்தூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை, திருமுடிவாக்கம் சந்திப்பில் தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக இரு சக்கர வாகனத்தின் வந்த நபரை நிறுத்தி, சோதனை செய்தனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளை அவா் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக வாகனத்தில் வந்த சிட்லபாக்கத்தைச் சோ்ந்த செல்வம் (47) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து 320 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள், 1 செல்லிடப்பேசி, ரூ.8,400, 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, செந்தில்வேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...