/

19 மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு: விவசாயிகள் மறியல்

திருவள்ளூரில் கடந்த ஒரு  மாதகாலமாக 19 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப் படுவதாகக் கூறி விவசாயிகள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
சாலைமறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
Updated On :27 ஜனவரி 2024, 8:00 pm

DIN

திருவள்ளூரில் கடந்த ஒரு  மாதகாலமாக 19 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப் படுவதாகக் கூறி விவசாயிகள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழானூர்,  மெய்யூர், நசரத், தண்டலம், காவனூர், சிவன் கோவில்,  கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

Story image

இந்தநிலையில் விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கி 19 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுவதாக புகார் அளித்துள்ளனர்.

Story image

இந்த நிலை கடந்த ஒரு மாத காலமாக நீடிப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாமரைப்பாக்கத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் கீழானூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Story image

தகவல் அறிந்து விரைந்து வந்த வெங்கல் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு தினங்களில் முழுவதும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.